உள்ளடக்கத்துக்குச் செல்

டன்கிர்க் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டன்கிர்க்
Dunkirk
இயக்கம்கிறிஸ்டோபர் நோலன்
கதைகிறிஸ்டோபர் நோலன்
இசைஹான்ஸ் சிம்மர்
நடிப்பு
ஒளிப்பதிவுஹொயிட் வேன் ஹொய்டெமா
படத்தொகுப்புலீ ஸ்மித்
கலையகம்சின்காபி பிலிம்சு / ரேட்பேக்-டூன் எண்டர்டெயின்மெண்ட் / கனால்+ / சினி+ / சுடியோகனால்
விநியோகம்வார்னர் ப்ரோஸ். பிக்ச்சர்ஸ்
வெளியீடு13 சூலை 2017 (2017-07-13)
19 சூலை 2017 (பிரான்சு)
20 சூலை 2017 (நெதர்லாந்து)
21 சூலை 2017 (ஐக்கிய இராச்சியம் / ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்106 நிமிடங்கள்
நாடு
  • ஐக்கிய இராச்சியம்
  • ஐக்கிய அமெரிக்கா
  • பிரான்சு
  • நெதர்லாந்து
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$100 மில்லியன்
மொத்த வருவாய்$524.9 மில்லியன்

டன்கிர்க் (ஆங்கிலம்:Dunkirk) என்பது கிறிஸ்டோபர் நோலனால் எழுத்து, இயக்கம் மற்றும் இணைத்தயாரிப்பு செய்யப்பட்டு 2017-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது இரண்டாம் உலகப்போரின் போது நடந்த டன்கிர்க் வெளியேற்றம்(டைனமோ நடவடிக்கை) எனும் நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு சித்தரிக்கப்பட்ட திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தின் நடிப்புக்குழு பியோன் வைட்ஹெட்,டாம் க்ளின்-கார்னீ,ஜாக் லோடன்,ஹாரிஸ் ஸ்டைல்ஸ்,அனுரின் பெர்னார்ட்,ஜேம்ஸ் டி'ஆர்சி,பேரி கோகன்,கென்னத் ப்ரானாஹ்,கிளியன் மர்பி,மார்க் ரைலன்ஸ் மற்றும் டாம் ஹார்டி ஆகியோரை உள்ளடக்கியது. இத்திரைப்படம் பிரித்தானிய, அமெரிக்க மற்றும் டச் இணைத்தயாரிப்பாளர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வார்னர் ப்ரோஸ். பிக்ச்சர்ஸ் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.

டன்கிர்க் திரைப்படம் மூன்று விதமான வெளியேற்றங்களை சித்தரிக்கிறது: நிலம், நீர் மற்றும் ஆகாயம். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2016 ஜூன் மாதம் டன்கிர்க்-இல் தொடங்கி செப்டம்பர் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் முடிக்கப்பட்டு அடுத்தக்கட்ட தயாரிப்பு வேலைகள் தொடங்கப்பட்டது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் 'ஹொய்ட் வான் ஹொய்டமா' ஐமாக்ஸ் 65mm மற்றும் 65mm பெரிய வடிவம் கொண்ட படங்களில்(large format film stock) படம்பிடித்தார்.மேலும் இத்திரைப்படத்தில் ஆயிரக்கணக்கான படகுகள், இரண்டாம் உலகப்போர் கால விமானங்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.

இத்திரைப்படத்தின் சிறப்புக்காட்சி(premier) 13 ஜூலை 2017-ல் லண்டன்-ல் உள்ள ஓடியன் லேய்ச்செஸ்டர் சதுக்கத்தில் திரையிடப்பட்டது மற்றும் 21 ஜூலை 2017-ல் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் ஐமேக்ஸ் 70mm மற்றும் 35mm வடிவங்களில் வெளியிடப்பட்டது.

இத்திரைப்படம் $524.9 மில்லியன் வசூலித்ததன் மூலம் இரண்டாம் உலகப்போரின் கதைக்களத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற சாதனை படைத்தது. மேலும் இப்படத்தின் சிறந்த இயக்கம்,திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவிற்காக விமர்சகர்களாலும்,திரைப்பட ஆர்வலர்களால் பாராட்டப்பட்டது.பல விமர்சனங்கள் இது நோலனின் சிறந்த படைப்புகளில் ஒன்று என்ற கருத்தை முன்வைத்தன.

மேலும் படிக்க

[தொகு]
  • ஜாசுவா லீவைன் (சூன் 27, 2017). டன்கிர்க்: திரைப்படமாக்கப்பட்ட வரலாறு. HarperCollins. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0062740304.
  • சேம்சு மொட்ரம் (18 ஜூலை 2017). டன்கிர்க் தயாரிப்பு. Insight Editions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1683831075. {{cite book}}: Check date values in: |date= (help)
  • கிறிஸ்டோபர் நோலன் (ஆகத்து 8, 2017). டன்கிர்க். Faber & Faber. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0571336258.

வெளியிணைப்புகள்

[தொகு]