உள்ளடக்கத்துக்குச் செல்

நார்ட்வெட் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நார்ட்வெட் விளைவு (Nordtvedt effect) இயற்பியலின் பிரிவாகிய வானியற்பியலில் புவிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள சாா்பு இயக்கத்தின் கோட்பாட்டினைக் குறிக்கிறது. இந்த இயக்கமானது தன் ஈா்ப்பு ஆற்றல் பெற்ற ஒரு பொருளானது நிலைமத் திரளை விட வேறுபட்ட பங்களிப்பை ஈா்ப்பு நிறைக்கு வழங்குவதாகும். உற்றுநோக்கும் பாேது  நாா்ட்வெட் விளைவானது வலுவான சமநிலை கோட்பாட்டை மீறுவதாக இருக்கும். இது ஈர்ப்பு விசையில் ஒரு பொருளின் இயக்கமானது அதன் நிறையையோ அல்லது தொகுப்பையோ சார்ந்து இல்லை என்பதைக் குறிக்கிறது.

பெயர்க் காரணம்

[தொகு]

கென்னெத் எல்.நாா்ட்வெட் என்பவர் இக்கோட்பாட்டினை விளக்கியதால் அவரது பெயரால் இதற்குப் பெயரிடப்பட்டது. சில ஈர்ப்பு கோட்பாடுகள் பெரிய பொருட்கள் அவற்றின் ஈர்ப்பு சுய-ஆற்றலைப் பொறுத்து வெவ்வேறு விகிதங்களில் இருக்க வேண்டும் என்று முதலில் நிரூபித்தது.

சோதனை

[தொகு]

ஈர்ப்பு விசையானது இக்கோட்பாட்டை மீறினால், பூமியானது சந்திரனை விட சற்று வித்தியாசமான விகிதத்தில் சூரியனை நோக்கி நகர வேண்டும். இதன் விளைவாக சந்திர சுற்றுப்பாதையின் துருவமுனைப்பு ஏற்படுகிறது என்பதை நோர்ட்வெட் கவனித்தார். நோர்ட்வெட் விளைவு இருப்பதை (அல்லது இல்லாமை) சோதிக்க, விஞ்ஞானிகள் சந்திர சீரொளிச் சரகப் பரிசோதனையைப் (Lunar Laser Ranging experiments) பயன்படுத்தியுள்ளனர், இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை மில்லிமீட்டர் துல்லியத்துடன் அளவிடும் திறன் கொண்டது. இதுவரையான சோதனை முடிவுகள் நோர்ட்வெட் விளைவுக்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை. அஇதன் மூலம் இக்கோட்பாடு மிகவும் பலவீனமானது என்பதை நிரூபிக்கிறது.[1] அடுத்தடுத்த அளவீடுகள் மற்றும் அதிக துல்லியமான பகுப்பாய்வு விளைவுக் கோட்பாட்டினை மேம்படுத்தியுள்ளன.[2][3] மெசெஞ்சர் விண்கலம் மூலம் புதனின் சுற்றுப்பாதையின் அளவீடுகள் நோர்ட்வெட் விளைவை இன்னும் சிறிய அளவில் இருக்கும்படி செம்மைப்படுத்தியுள்ளன.[4]

மேற்காேள்கள்

[தொகு]
  • Nordtvedt Jr Kenneth (1968). "Equivalence Principle for Massive Bodies, II. Theory". Phys Rev. 169 (5): 1017. doi:10.1103/physrev.169.1017. 
  • Nordtvedt Jr K (1968). "Testing Relativity with Laser Ranging to the Moon". Phys. Rev. 170 (5): 1186. doi:10.1103/physrev.170.1186. 
  1. Murphy Jr., T. W. "THE APACHE POINT OBSERVATORY LUNAR LASER-RANGING OPERATION" (PDF). பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.
  2. Adelberger, E.G.; Heckel, B.R.; Smith, G.; Su, Y. & Swanson, H.E. (Sep 20, 1990), "Eötvös experiments, lunar ranging and the strong equivalence principle", Nature, 347 (6290): 261–263, Bibcode:1990Natur.347..261A, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1038/347261a0, S2CID 4286881
  3. Williams, J.G.; Newhall, X.X. & Dickey, J.O. (1996), "Relativity parameters determined from lunar laser ranging", Phys. Rev. D, 53 (12): 6730–6739, Bibcode:1996PhRvD..53.6730W, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1103/PhysRevD.53.6730, PMID 10019959
  4. Genova, Antonio; Mazarico, Erwan; Goossens, Sander; Lemoine, Frank G.; Neumann, Gregory A.; Smith, David E.; Zuber, Maria T. (2018-01-18). "Solar system expansion and strong equivalence principle as seen by the NASA MESSENGER mission". Nature Communications (Springer Science and Business Media LLC) 9 (1): 289. doi:10.1038/s41467-017-02558-1. பன்னாட்டுத் தர தொடர் எண்:2041-1723. பப்மெட்:29348613. Bibcode: 2018NatCo...9..289G.