உள்ளடக்கத்துக்குச் செல்

வலைவாசல்:கிறித்தவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கிறித்தவம் வலைவாசல்



கிறித்தவம் வலைவாசல் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Sermon on the Mount
Sermon on the Mount

கிறித்தவம் ஓரிறைக் கொள்கையுடைய (Monotheism) சமயமாகும். தமிழில் கிறித்தவம், கிறித்துவம், கிறிஸ்தவம் என்றும் குறிப்பர். இது நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது படிப்பினைகளையும் மையப்படுத்தி செயற்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை யூதர்களால் எதிர்பார்க்கப்பட்ட மெசியா (மீட்பர்) என்றும் கிறிஸ்து (ஆசிர்வதிக்கப் பட்டவர்) எனவும் நம்புகின்றனர். 2.1 பில்லியன் விசுவாசிகளை கொண்டு உலகின் பெரிய சமயமாக இது காணப்படுகிறது. கிறிஸ்தவம் பல உட்கிளைகளைக் கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்கம் மிகப்பெரியதாகும். கிறிஸ்தவம் யூத மதத்தின் நிறைவாக தன்னை கருதுவதால் யூத மதத்தின் புனித நூலை, பழைய ஏற்பாடு என்னும் பெயரில் கிறிஸ்தவ விவிலியத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளது. யூதம் மற்றும் இசுலாம் சமயங்களைப் போலவே கிறிஸ்தவமும் அபிரகாமிய சமயமாகும்.

தொகு  

சிறப்புக்கட்டுரை


தமிழ் விவிலியம் என்பது கிறித்துவர்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படையாக உள்ள திருவிவிலியத்தின் தமிழ்ப் பதிப்பு ஆகும். தமிழ்த் திருவிவிலியம் வேதம், வேத புத்தகம், மறைநூல், சத்தியவேதம், வேதாகமம், திருமறைநூல் போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறது. விவிலியத்தை முதன்முதலாகத் தமிழில் பெயர்த்து அச்சேற்றியவர் செருமானியரான பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க். பழைய ஏற்பாடு முழுமையாக முடிவடையாத பொழுதே சீகன்பால்க் இறந்துவிட்டதால் பெஞ்சமின் சூல்சு என்பவர் அப்பணியைச் செய்து முடித்தார். மேலும் இவர் புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதியையும் திருத்தினார். இலங்கையில் தமிழ் விவிலியப் பதிப்பு டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநராக இருந்த ஐ.பி. இம்ஹோஃப்பின் ஆதரவின் கீழ் வெளியானது. திருவிவிலியத்தின் தமிழ் மொழிப்பெயர்ப்பு கத்தோலிக்க கிறித்தவ சபைகள் வெளியிட்ட நூல்கள் மூலம் பிரபலமடைந்தது. அருட்திரு ஞானப்பிரகாசம் தனிப்பட்ட முறையில் முப்பது ஆண்டுகள் உழைத்து விவிலியத்தைத் தமிழில் பெயர்த்தார். அது கொல்கத்தாவில் 1932 இல் அச்சிடப்பட்டது. பழைய, புதிய ஏற்பாடுகளை இக்காலத் தமிழ் நடையில் பெயர்க்கும் பணி 1972இல் தொடங்கி 1995இல் முடிவுற்றன. இப்புதிய மொழிபெயர்ப்பு திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) என்றழைக்கப்படுகிறது.




தொகு  

பகுப்புகள்


கிறித்தவ பகுப்புகள்

கிறித்தவம் பகுப்பு காணப்படவில்லை
தொகு  

கிறித்தவ நபர்கள்


திருத்தந்தை பத்தாம் பயஸ் (1835-1914) என்பவர் 1903 முதல் 1914 வரை கத்தோலிக்க திருச்சபையின் 257ஆவது திருத்தந்தையாக இருந்தவர். இவர் திருச்சபையின் கொள்கைகளுக்கு நவீனத்துவ விளக்கம் அளிப்பதை எதிர்த்துப் பாரம்பரிய விளக்கங்களையே ஊக்குவித்தார். இவரின் மிக முக்கியச் செயல்பாடாகக் கருதப்படுவது, இவர் வெளியிட்ட திருச்சபைச் சட்டத் தொகுப்பாகும். இவ்வாறு வெளியிடப்பட்டது அதுவே முதல் முறையாம். இவர் கிறித்துவ ஒழுக்கங்களைத் தனிமனித வாழ்விலும் கடைபிடிப்பதில் ஊக்குவித்தார். இவரின் தொண்டு உள்ளம் வியக்கத்தக்கது. 1908-ல் நடந்த மெசினா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை, இத்தாலிய அரசு உதவி புரிய ஆரம்பிக்கும் முன்பே, தாமாகவே முன்வந்து அப்போஸ்தலர் மாளிகையில் தங்க வைத்தார். இவர் தம் குடும்பத்திற்கு எந்தவித உதவியும் பெறவில்லை. இவரின் மூன்று சகோதரிகளும் ஏழ்மையிலேயே வாழ்வைக் கழித்தனர். பலர் இவரின் இறப்புக்கு பின் இவரைப் புனிதரெனக் கொண்டாடி வெளிப்படையான வணக்கம் செலுத்தினர்.


தொகு  

உங்களுக்குத் தெரியுமா...


தொகு  

விவிலிய வசனங்கள்



தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை - இயேசு
- யோவான் 15:13
தொகு  

நீங்களும் பங்களிக்கலாம்


நீங்களும் பங்களிக்கலாம்
  • கிறித்தவம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|கிறித்தவம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.
  • கிறித்தவம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கிறித்தவம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • கிறித்தவம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • கிறித்தவம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.
தொகு  

இதே மாதத்தில்


நிகொலோன் கதீட்ரல்



தொகு  

சிறப்புப் படம்


எருசலேம் நகரின் பரந்த தோற்றம்
எருசலேம் நகரின் பரந்த தோற்றம்
படிம உதவி: Bienchido

எருசலேம் நகரம் இசுரயேல் நாட்டில் உள்ளது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்கு புனித தூயகம் என்றும் பொருள். ஆபிரகாமிடமிருந்து மரபுவழி வருகின்ற சமயங்களாகிய யூத சமயம், கிறித்தவ சமயம், இசுலாம் ஆகிய மூன்று மதங்களுக்கும் எருசலேம் ஒரு புனித நகராக உள்ளது. படத்தில் எருசலேம் நகரின் பரந்த தோற்றம் காட்டப்பட்டுள்ளது.


கிறித்தவம் தொடர்பானவை


தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்